Wednesday, 9 July 2014

VijaySethupathi Plays 55 year Old man in his upcoming Movie 'Oranga Mittai'

ஹீரோ என்கிற வட்டத்தை விட்டு வெளியே வந்து நடித்துக்கொண்டிருப்பவர் விஜயசேதுபதி. அதோடு படத்துக்குப்படம் கதாநாயகிகளை கட்டிப்பிடித்து டூயட் பாட வேண்டும், வில்லன்களை அடித்து துவைத்து துவம்சம் செய்ய வேண்டும் என்ற வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட கதைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து நடித்து வரும் அவர், தற்போது தான் தயாரித்து நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறார்.


அதற்காக தனது நரை விழுந்த தலைமுடியுடன் நடிக்கும் விஜயசேதுபதி, தனது முகம் உடலமைப்பைகூட முதிர்ச்சியாக மாற்றியிருப்பதோடு, 55 வயதுக்காரருக்கு இருக்கும் தொப்பை கெட்டப்புக்கும் மாறியுள்ளார். குறிப்பாக, இதுவரை தான் நடித்த எந்த படத்தின் சாயலும் நடிப்பில் தென்படக்கூடாது என்பதற்காக காட்சிகளில் மாறுபட்ட ரியாக்சனை பிரதிபலிக்கிறாராம்.

இதுபற்றி விஜயசேதுபதி கூறுகையில், நடிக்கிற படம் வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் இருப்பதில்லை. நான் நடிக்கிற வேடம் எனக்கும் திருப்திகரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். காரணம், நானும் ஒரு ரசிகன்தான். அதனால் இன்றைய ரசிகர்கள் ஒரு நடிகரை எந்தமாதிரியாக திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பது என்னால் உணரமுடியும். அதனால் அதற்கேற்ற கதைகளை, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தேவையான நடிப்பை வெளிப்படுத்துகிறேன் என்று சொல்லும் விஜயசேதுபதி, நான் ஹீரோவாக இல்லாமல் நடிகனாக மட்டுமே இருப்பதால், இளவட்டம், முதுமை என எல்லாவிதமான வேடங்களிலும் நடிக்கிறேன். என் விசயத்தில் இமேஜ் என்பது எந்த இடத்திலும் வந்து என்னை இடையூறு பண்ணுவதில்லை என்கிறார்.

No comments:

Post a Comment